ஜுஸுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு பளார் விட்ட காவலர் ; வெளியான சிசிடிவி காட்சி… உடனே ஆக்ஷன் எடுத்த மாவட்ட எஸ்.பி..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 1:58 pm
Quick Share

பல்லடம் அருகே ஜூசுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டு மடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜூஸ் கடை வைத்துள்ளார். இன்று பிற்பகல் 12 மணி அளவில் சுரேஷ் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சின்னக்கரை சோதனை சாவடியில் பணிபுரிந்து வரும் பல்லடம் காவல் நிலைய தலைமை காவலர் பாண்டியன் என்பவர் ஜூஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஜூஸுக்கு இன்னும் பணம் வரவில்லை என சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் பாண்டியன் சுரேஷை தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் காவலர் பாண்டியனை தடுத்து அனுப்பி வைத்துள்ளனர். காவலர் பாண்டியன் தாக்கியதில் சுரேஷ் படுகாயம் அடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவலர் பாண்டியன் ஜூஸ் கடை சுரேஷை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே. இந்த கடையில் தலைமை காவலர் பாண்டியன் பணம் தராமல் ஜூஸ் குடித்து வந்ததால் பிரச்சனையானதாகவும் கூறப்படுகிறது. ஜூஸுக்கு காசு கேட்டதற்காக கடைக்காரரை தாக்கிய காவலர் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. சசாங் சாய் உத்தரவிட்டார்.

Views: - 664

0

0