அட இதுக்கு போய் கலவரமா? டாஸ்மாக்கில் உண்டான பிரளயம் : தடுக்க வந்தவருக்கு சட்டை கிழிந்த சோகம்!!

7 April 2021, 6:42 pm
Tasmac Issue -Updatenews360
Quick Share

திருப்பூர்: டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டிலை வெளியே வாங்கி வந்து மது அருந்தியதால் பார் ஊழியர்கள் தட்டிக் கேட்டு தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் தண்ணீர் வெளியே வாங்கி வந்து மது அருந்தியதாகவும் உள்ளே பொருட்கள் வாங்கி மட்டுமே பாரில் அமர்ந்து மது அருந்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் மது பிரியரை பார் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மது பிரியர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் உடனடியாக சென்று 20க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து பார் ஊழியர்களை தாக்கியுள்ளார்.

தடுக்க சென்ற மற்றொரு நபரையும் தர்ம அடி கொடுத்துள்ளனர். பார் ஷட்டரையும் இழுத்து மூடினர். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அடிதடி சம்பவத்தில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Views: - 0

0

0