வேலை தேடிச் சென்ற இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது!!

1 October 2020, 12:06 pm
Tirupur Rape - updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பூரை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிந்து 3 பேரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருப்பூரை சேந்த 3 பேரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரெமோஜோதி தூரி (வயது 22 ). கணவனை பிரிந்து கோவையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் அருள்புரம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவரிடம் வேலை எதாவது வாங்கி தரும்படி கூறியுள்ளார்.

ராஜேஸ்குமார் நேரில் வர சொன்னதை அடுத்து கடந்த 28 ஆம் தேதி பல்லடம் வந்துள்ளார் பிரெமோஜோதி தூரி. சில இடங்களுக்கு நேரில் சென்று வேலை இல்லை என கூறிய பிறகு , தன்னை மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார்.

ஆனால் ராஜேஷ்குமார் தன்னுடைய தம்பி ராஜூ உடன் செல்லுமாரு கூறிய பிறகு அவருடன் சென்றுள்ளார். ஆனால் ராஜூ பேருந்து நிறுத்தம் செல்லாமல் கள்ளிமேடு பகுதியில் உள்ள பாறைக்குழி முட்புதர் அருகே அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே இருந்த ராஜூ வின் நண்பர்கள் தமிழ் , தாமோதரன் , அன்பு , கவின் ஆகிய 5 பேரும் சேர்ந்து அஸ்ஸாம் மாநில பெண் பிரெமோஜோதியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து பல்லடம் காவல்துறையினரிடம் சென்று பிரெமோஜோதி புகார் கொடுத்ததை அடுத்து 6 பேர் மீதும் பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது ராஜூ , அன்பு , கவின் ஆகிய 3 பேரையும் பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2000 ருபாய் பணம் , இரு சக்கர வாகனம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ் , தாமோதரன் , ராஜேஷ்குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.