சச்சின் நிதியுதவி அளித்த அரசுப்பள்ளியில் சேர “போட்டா போட்டி“

26 August 2020, 5:06 pm
Kangeyam School - Updatenews360
Quick Share

திருப்பூர் : கல்வி அறிவு கொடுத்த  பள்ளிக்கு பெருமை சேர்த்த வெளிநாட்டில் வசிக்கும் மாணவி வெளியிட்ட  ஒரே ஒரு வீடியோ பல லட்சம் பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது மங்களப்பட்டி . இங்கு  நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கு அதிகரிக்க ஈடுபட்டுவந்த வேளையில் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது ஜெர்மெனியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகின்றார். அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு பள்ளி மற்றும் தமிழ் வழிக்கல்வி குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் பலலட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் அதிகப்படியாக பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் இப்பள்ளிக்கு 2015-2016 ஆண்டில் புதிய கட்டிடம் கட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ளது மங்களப்பட்டி. இங்கு  நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.  இப்பள்ளியானது  1946 துவக்கப்பட்டது பின்னர் 2008 உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தப்பட்டது.

அதற்க்கு இப்பகுதியை சார்ந்த ஒரு விவசாயி இலவசமாக இடம்கொடுத்ததாக தெரிவிக்கின்றனர். தற்போது நடுநிலைப் பள்ளியில் 70 மாணவ மாணவியர்களும்  உயர்நிலைப்பள்ளியில் 200  மாணவ மாணவியர்களும் கல்வி பயின்றுவருகின்றனர்.

தனியார் பள்ளியின் மீது பெற்றோர்கள் கொண்ட மோகத்தினால் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலை மாறிவிட்டது . இதனால் கல்வி நிலையங்களை அரசும் தரம் உயர்த்துவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது. புதிய புதிய பாடத்திட்டங்கள் , ஸ்மார்ட் கிளாஸ் , ஆங்கிலவழி கல்வி ஆகியவைகள் செயல்படுத்தி வருகின்றனர்.  இதற்க்கு உறுதுணையாக இவ்வூரை சார்ந்த பொதுமக்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு உதவியாக வெள்ளகோவில் ஒன்றிய பள்ளி அறக்கட்டளை அமைப்பும்  பெரும் உதவியாக செயல்படுகின்றனர். இவர்களின் முயற்சியால் கடந்த 2015 -2016 கல்வி ஆண்டில் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்குவதற்கு உதவி புரிய வேண்டும் என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களிடம் உதவிகோரி கடிதம் அனுப்பினார்.

அப்போது  சச்சின் டெண்டுல்கர் மாநிலங்கள் அவை நியமன உறுப்பினராக (ராஜ்யசபா எம்பி )  இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி நிதி 2015 -2016 நிதியில் இருந்து நான்கு வகுப்பறைகள் கட்ட 30 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கை அனுமதித்ததை தொடர்ந்து  பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்,  வெள்ளகோவில் ஒன்றிய பள்ளி கல்வி அறக்கட்டளை அமைப்பு ஆகியோர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சியை ஏற்படுத்திவருகின்றனர்.

இதை அறிந்த இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி உமா மஹேஸ்வரி இப்பகுதி பெற்றோர்களுக்கு பள்ளியின் சிறப்பும் தமிழின் பெருமையையும் பேசி ஒரு வீடியோ ஒன்றை அவரின் ஆசிரியர் கிருஷ்ணவேணிக்கு  அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை அவ்வாசிரியர் வாட்ஸ் ஆப் , பேஸ் புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பல லட்சம் நபர்கள் பார்த்ததுடன் சிலர் பகிரவும் செய்துள்ளனர். இவர் போல் அரசு பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்கள் பள்ளி பெருமை சேர்க்கும் விதமாக எதாவது ஒரு செயலை செய்தால் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை கட்டாயம் உயரும் என்பதில் துளியும் ஐயமில்லை என்கின்றனர் ஆசிரியர்கள் .

வெள்ளகோவில் ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் சங்க நிர்வாகில் ஒன்றிணைத்து உருவாக்கி இப்பள்ளி மற்றும் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இவர்களுடன் சில சமூக அமைப்புக்களும் உதிவிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களாகி தாங்களும் அனைத்து அரசு உதவிகளையும் பெரும் வேளையில் அரசு நடத்தும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் உறுதுணையாக இருக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சச்சின் டெண்டுல்கர் உதவி புரிந்த போது அறியப்படாத பள்ளி இங்கு படித்த மாணவி வீடியோ பதிவின் போது அறியப்படுவது மாணவிக்கு பெருமையா அல்லது பள்ளிக்கு பெருமையா என பெற்றோர்கள் தாங்கள் தான்  முடிவுசெய்யவேண்டும் 

Views: - 5

0

0