ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா : அலறும் மாவட்டம்…! பீதியில் மக்கள்…!

25 June 2020, 12:14 pm
Corona_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் தான் பாதிப்புகள் அதிகம் தென்படுகிறது. தற்போது, மதுரை உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதோடு, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,099-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனாவுக்கு 45 உயிரிழந்துள்ளனர். மேலும் 1,468 பேர் குணமடைந்துள்ளனர்.