”அட அப்பரசென்டுகளா கொள்கையை மறந்துட்டீங்களே” : திமுகவை வெளுத்து வாங்கிய த.மா.கா பிரமுகர்!!

5 February 2021, 7:32 pm
DMK TMC- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : திமுக கொள்கையை மறந்துவிட்டு சசிகலாவின் வருகைக்கு வக்காலத்து வாங்குவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி கிளை சிறையில் உள்ள தமாகா இளைஞர் அணி பொதுச்செயலாளர் சங்கரை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கில் காவல்துறையினர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யும் அறிவிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக கூறிய அவர், திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் இதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை ஆளும் அதிமுக அரசு சொல்லாத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றி உள்ளார்கள் என தெரிவித்தார்.

திமுக பொய்களைக் கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் கொரோனா மற்றும் நிவர், புரெவி புயலால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நல்ல அறிவிப்பாக விவசாயிகளுக்கு இது அமைந்துள்ளது என்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக ஆவார் என கூறினார்.

திமுக கொள்கையை மறந்துவிட்டு சசிகலாவின் வருகைக்கு வக்காலத்து வாங்குவதாகவும், காட்டுபள்ளி
அதானி துறைமுகம் 5000 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டால் மீனவர்கள் விவசாயிகள் நிலங்களை இழந்து பாதிப்பு அடைவார்கள் விவசாயிகள் மீனவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 26

0

0