தம்பி வா… தலைமையேற்க வா…!! நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுக்கும் போஸ்டரால் பரபரப்பு!!!

19 June 2021, 8:35 pm
Vijay Stalin - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திமுக ஆட்சியை தலைமை ஏற்க திரைப்பட நடிகர் விஜய்யை முதல்வர் அழைப்பது போல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவாரா வரமாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அரசியலுக்கு வருவது இல்லை என்று ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால் அவரைத் தொடர்ந்து திரைப்பட நடிகரான நடிகர் விஜய் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கொடியினை அறிமுகப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகும் போதும் மன்றக் கூட்டங்கள் நடைபெறும் பொழுதும் அந்த கொடியினை ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இன்று திண்டுக்கல் மாநகரம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட ” தம்பி வா தலைமை ஏற்க வா” என மறைந்த முதல்வர் அண்ணா கலைஞரை அழைத்தது போல முதல்வர் செங்கோல் கொடுத்து திரைப்பட நடிகர் விஜயை திமுக கட்சிக்கு தலைமை தாங்க அழைப்பது போல் நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

நகர்களில் மட்டுமின்றி திமுக கட்சி அலுவலகம் முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 246

0

0