வீட்டில் விநாயகர் சதுர்த்தி! மனைவி மற்றும் மகனுடன் கொண்டாடிய முதலமைச்சர்!!

22 August 2020, 2:54 pm
CM Vinayagar- Updatenews360
Quick Share

சேலம் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலத்தில் தனது குடும்பத்தினர் உடன் விநாயகருக்கு படைலிட்டு வழிபாடு நடத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சேலத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பழங்கள், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக கவசம் அணிந்தவாறு சிறப்பு பூஜை செய்தார்.

இந்த பூஜையில் முதல் அமைச்சரின் மனைவி ராதா, மகன் மிதுன்குமார் ஆகியோர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடினார்.

Views: - 35

0

0