தமிழகத்தில் கோயில்களில் வழிபட அனுமதி..! அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

8 August 2020, 10:17 am
Cm edappadi - Updatenews360
Quick Share

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக இருக்கிறது. பலி எண்ணிக்கையும் பாதிப்பும் உச்சக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது படிப்படியாக தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந் நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு: ரூ.10 ஆயிரத்திற்கும் வருமானம் குறைவாக உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களிடமும் அனுமதி பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 2

0

0