மதுரையா? திருச்சியா? முதலமைச்சர் சொன்ன “நச்“ பதில்!!

21 August 2020, 11:39 am
CM Reply- Updatenews360
Quick Share

சென்னை : இரண்டாவது தலைநகர் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் ஒரே வார்த்தையில் பேசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் எது என்ற பேச்சுத்தான் அதிகமாக உலாவி வருகிறது. குறிப்பாக மதுரையை சேர்ந்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். உடனே இதற்கு ஆதரவால அமைச்சர் செல்லூர் ராஜுவும் எம்ஜிஆரின் கோரிக்கையும் இதுதான் எனவே மதுரையை இரண்டாது தலைநகராக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

ஒரு பக்கம் மதுரையை அறிவிக்க வேண்டி முதலமைச்சருக்கு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், திருச்சியை தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடரராஜன் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆரின் கனவுத்திட்டமும் இதுதான் என கூறி, நேற்று திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலையை சுத்தம் செய்து பரபரப்பினையும் உண்டாக்கினார்.

திருச்சியை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை ஏற்கனவே திமுக வை சேர்ந்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேலூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தனர்.

மதுரையா திருச்சியா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இரண்டு தலைநகர் குறித்த கருத்துகள் அரசின் கருத்து அல்ல. அது அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்துகள் என கூறி விடைபெற்றார். இருதலைநகர் குறித்து அமைச்சர்களின் கருத்துக்கு முதலமைச்சர் ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.

Views: - 41

0

0