எல்லையில் மதுப்பிரியர்கள் தொல்லை.! அவசர கதியால் காற்றில் பறந்த விதி.!!

4 May 2020, 5:08 pm
Krishnagiri Tasmac- Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஓசூர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கர்நாடக அரசு மதுபானக் கடையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடிமகன்கள் நிரம்பி வழிகின்றது.

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அம்மாநிலத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதால் தமிழக எல்லையில் தமிழக குடிமகன்களை குறிவைத்து திறக்கப்பட்ட மதுபான கடைகள் தற்போது தமிழக எல்லையில் மிக அருகே 100 மீட்டர் இடைவெளியில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓசூர் அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து தங்களின் இருசக்கர வாகனத்தில் வரும் குடிமகன்கள் தமிழக எல்லையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கர்நாடகா எல்லைப் பகுதியில் இருக்கிற மதுபானக் கடையில் மது கடை வாங்கி செல்கின்றனர்.

காவல்துறை சார்பில் அவர்களை தற்போது விரட்டி வருகின்றனர். சமூக இடைவெளி கடைபிடிக்காமல் குடிமகன்கள் தங்கள் போதை பாதையை நாடிச் செல்வதால் பசுமை மண்டலமாக இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தோற்று வந்துவிடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.