துப்பாக்கியை கையில் எடுத்த ஏழுமலை…! வீட்டுக்குள்ளே எழுந்த டுமீல்..! அதிர்ந்த விழுப்புரம்

16 August 2020, 11:56 am
Quick Share

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவலர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் மன அழுத்தம் கொண்ட துறையாக பார்க்கப்படுவது காவல்துறையாகும். குடும்ப நிகழ்வுகள், சொந்த வேலைகள் என எதிலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் சட்டம், ஒழுங்கை காக்கும் தலையாய பணியில் காவலர்கள் உள்ளனர்.

அண்மைக்காலமாக காவல்துறையில் உள்ளவர்கள் இத்தகைய மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அது போன்றதொரு சம்பவம் இப்போது விழுப்புரத்தில் நடைபெற்று உள்ளது. விழுப்புரம் ஆயுதப்படை 2ம் நிலை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தால் காக்குப்பம் ஆயுதப்படை வளாக குடியிருப்பில் அவரது குடும்பத்தினரும்,  காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் அறிந்தவுடன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

காவல்துறையில் இதுபோன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மன ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்று உளவியல் ஆலோசகர்கள் கூறி உள்ளனர்.

Views: - 35

0

0