தமிழக மாணவரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது.! உறவினர்கள் கண்ணீரில் நன்றி!!

22 August 2020, 10:47 am
Dharapuram - Updatenews360
Quick Share

திருப்பூர் : ரஷ்யாவில் நீரில் மூழ்கி  இறந்த தாராபுரத்தை சேர்ந்த மாணவர் முகமது ஆசிக் உடல் 12 நாட்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து அதிகாலை தாராபுரம் சொக்கநாதபாளையம் வந்தடைந்தது .

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரஷ்யாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் உடல்  11 நாட்கள் பிறகு நேற்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்து. இதனையடுத்து மாணவர்களின் உடலை அவரவர் சொந்த ஊருக்கு அரசு அமரர் உறுதி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தாராபுரத்தை சேர்ந்த மாணவர் முகமது ஆசிக் உடல் 12 நாட்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர் இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்துடன் காணப்பட்டது .

உடலை மீட்டு சொந்த ஊருக்கு எடுத்து வர உதவிய மத்திய ,மாநில அரசுகளுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தனர் . முகமது ஆசிக்யின் உடலை இஸ்லாம் முறைப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்துடன் காணப்பட்டது.

Views: - 37

0

0