நவ.,25ம் தேதி முதல் ஆந்திராவுக்கு பஸ்ல எப்ப வேணாலும் போலாம் : NO Condition!!

22 November 2020, 12:02 pm
Andhra Bus - Updatenews360
Quick Share

தமிழகத்தில் இருந்து ஆந்திர செல்ல இபாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒவ்பொரு கட்டமாக தளர்வு அறிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை இயக்கம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் செப்.,7ம் தேதி முதல் மாவட்டங்கள் இடையே குறைந்த அளவில் பேருந்து இயக்கம் தொடங்கியது.

அக்டோபர் 31ம் தேதி முதல் இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு பேருந்து இயங்கின. பின்னர் நவம்பர் 16ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் தமிழகம் – ஆந்திரா இடையே பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

Views: - 19

0

0

1 thought on “நவ.,25ம் தேதி முதல் ஆந்திராவுக்கு பஸ்ல எப்ப வேணாலும் போலாம் : NO Condition!!

Comments are closed.