வெளியானது குரூப் 4 ஹால் டிக்கெட்.. எப்படி..? எங்கு பெறலாம் தெரியுமா…? முழு விபரம் இதோ!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 8:29 pm
TNPSC - Updatenews360
Quick Share

ஜுன் 9ம் தேதி நடக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்பது பல இளைஞர்களின் இலட்சிய கனவாகவே இருந்து வருகிறது. இதற்காக பிரத்தியேகமாக பல பயிற்சிகளை மேற்கொண்டு இளைஞர்கள் பல்வேறு வகையான தேர்வுகளை தொடர்ச்சியாக எழுதி, பலர் அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஒடும் ரயிலில் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு : வீடியோவை கையில் எடுத்த போலீஸ்… 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்!

மேலும் இளைஞர்கள் பலரும் குரூப் 4 தேர்வுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிப்பதுண்டு, இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டுக்கான குரூப் 4 பிரிவில் சுமார் 6244 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது தட்டச்சர் வன காவலர் இளநிலை உதவியாளர் விஏஓ என பல காலி பணியிடங்கள் தற்பொழுது நிரப்பப்பட தயாராக உள்ளது.

வருகின்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்வுகளை எழுத தேவையான ஹால் டிக்கெட்டுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 01/2024 நாள் 30.01.2024 நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 4 வருகின்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இந்த இரு இணைய முகவரிகளை அணுகி அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு இந்த ஹால் டிக்கெட்டுகளை அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 172

0

0