சென்னையில் 279… விழுப்புரம் 67…. செங்கல்பட்டு 40… இது இன்றைய கொரோனா பரிதாபம்…

9 May 2020, 7:39 pm
Cbe Scavengers Corona Test - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று வரையில் 6009 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் 67 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில் 3,330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலூரில் 394 பேரும், விழுப்புரத்தில் 293 பேரும், திருவள்ளூரில் 290 பேரும், அரியலூரில் 271 பேருக்கும், செங்கல்பட்டில் 224 பேரும், கோவையில் 146 பேரும், திருப்பூரில் 114 பேரும், மதுரையில் 113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான முழு விபரம் இதோ..!