மாற்றமில்லாமல் தொடரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
12 December 2024, 10:26 am

சென்னையில் இன்று (டிச.12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த 3 நாட்கள் தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத நிலையில் உயர்ந்து வந்தது.

Silver Price Today

ஆனல், இன்று மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. இதன்படி, இன்று (டிச.12) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 947 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!