மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
8 January 2025, 10:33 am

சென்னையில், இன்று (ஜன.08) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை தொடக்கம் முதலே அதிகரிக்கத் தொடங்கியது. முன்னதாக, 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது.

Gold and Silver rate today

ஆனால், அடுத்த ஒரு நாள் குறைந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக அதே நிலையில் நீடித்தது. இதன்படி, இன்று (ஜன.08) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலை.. மக்கள் வரவேற்பு : களைகட்டும் போஸ்டர்கள்!!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!