தொடர் உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
10 February 2025, 10:43 am

சென்னையில், இன்று (பிப்.10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய்க்கு மேல் கட்டாயம் உயர்கிறது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

Gold and silver price today

இதன்படி, இன்று (பிப்.10) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: குரங்கால் மின் தடையா? நாடே இருளில் மூழ்கியதால் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கடும் கண்டனம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?