மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
24 February 2025, 10:38 am

சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (பிப்.24) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 787 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே