ஜூலை 3.,எந்த மாற்றமும் இல்லை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

3 July 2021, 8:07 am
Petrol_Price_UpdateNews360
Quick Share

சென்னை: பெட்ரொல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முந்தைய காலங்களில் அவற்றின் விலையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான அளவு மானியங்களை வழங்கி பெட்ரோல், டீசல் விலை உயராத வண்ணம் பார்த்துக் கொண்டது.

மேலும், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஏற்றி, இறக்கி வந்தது. இது மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது. அது நாள் முதல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் சில இடங்களில் சதம் அடித்துள்ளது. தமிழகத்திலும் நேற்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி வாகன ஓட்டிகளை அதிரவைத்தது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 100.13 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

Views: - 102

0

0