இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி தெரியுமா..? உறைந்து போன விலை மாற்றம்..!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 8:24 am
Petrol Rate - Updatenews360
Quick Share

சென்னை : 100 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் மற்றும் டீசலின் விலையின் இன்றைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

ஆனால், கடந்த 25 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 26வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 673

0

0