கோவையில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

5 July 2021, 9:59 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 436 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 22ஆயிரத்து 20ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இங்கு தொற்று பாதிப்பு அதிகாமக இருப்பதால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பில் கோவை தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது.இந்த நிலையில், இன்றைய பாதிப்பு குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 457 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 2 ஆயிரத்து 992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 லட்சத்து 22ஆயிரத்து 20பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 2 ஆயிரத்து 76 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25லட்சத்து 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 124

0

0