ஒரே ஒரு உயிரிழப்பு ; 300க்கும் குறைவான பாதிப்பு..! கோவையில் இன்றைய கொரோனா நிலவரம்

13 July 2021, 9:13 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் நாட்களுக்குப் பிறகு இன்று ஒரே ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மேலும், 282 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் கோவை மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்தது. தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும் தமிழக அளவில் கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு உயிர் இழப்பு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்றைய பாதிப்பு குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 408பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 3 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 லட்சத்து 52ஆயிரத்து 617பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 730 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 2 ஆயிரத்து 108 பேர் உயிரிழந்துள்ளனர்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25லட்சத்து 23ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 87

0

0