இன்றும் பெட்ரோல் விலை உயர்வு: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

14 January 2021, 7:51 am
Never make these mistakes at the petrol pump
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.18 ரூபாய், டீசல் லிட்டர் 79.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 87.40 ரூபாய் எனவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 80.19 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 8

0

0