இன்றும் அதிகரித்த பெட்ரோல் விலை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!

23 November 2020, 9:27 am
Home delivery of petrol, CNG? Oil companies may provide all fuels at doorstep
Quick Share

சென்னை: கடந்த சில அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.53 ரூபாய், டீசல் லிட்டர் 76.55 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து 84.59 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து 76.72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதத்திற்கும் மேலாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0