40 ஆயிரம் பேருக்கு தயாராகும் மட்டன் பிரியாணி : மிலாடிநபியை முன்னிட்டு மக்களுக்கு வழங்கும் இஸ்லாமியர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
17 செப்டம்பர் 2024, 10:24 காலை
Mutton Biriyani
Quick Share

இறை தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கு பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வாங்குவதற்காக தற்பொழுது பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால் : அடுத்தது யார்? டெல்லி அரசியலில் பரபர!

இதில் 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500-க்கும் மேற்பட்ட பிரியாணி அரிசி,டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு 250 ராட்சச பாத்திரங்களை கொண்டு 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

mutton briyani

மேலும் அதனைத் தொடர்ந்து நாளை காலை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணிகள் வழங்க உள்ளனர்.

Mutton briyani 40000 people

அதற்கு முன்னதாக மிலாது நபி பண்டிகையொட்டி இன்று இரவு பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

  • சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து… தொடரும் சோகம் : நடந்தது என்ன?
  • Views: - 94

    0

    0