ஆறு மாதமாக களையிழந்த திற்பரப்பு : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பால் வெறிச்சோடியது!!

8 November 2020, 6:53 pm
Thirparappu - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சாரல் மழை ஓய்ந்த நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் வரத்திருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த சாரல் மழை தற்போது ஓய்ந்த நிலையில் திற்பரப்பு நீர் வீழ்ச்சிக்கு மிதமான அளவு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகள் குளிக்க மிதமான நீர் வரத்து இருந்தும் கடந்த ஆறு மாதங்களாக கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்காத காரணத்தால் அருவி சிறுவர் பூங்கா நீச்சல் குளம் மற்றும் படகு தளம் வெறிச்சோடி ஆள் அரவம் இன்றி களையிழந்து காணப்படுகிறது

Views: - 22

0

0