ராணியின் அழகை குலைத்த கொரோனா : இன்று உலக சுற்றுலா தினம்!!

27 September 2020, 10:19 am
Ooty - Updatenews360
Quick Share

நீலகிரி : உலக சுற்றுலா தினமான இன்று சுற்றுலா ஸ்தலங்கள் கலையிழந்து காணப்பட்டு வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களை தன்னகத்தை கொண்ட மாவட்டமாகும். நூற்றாண்டைக் கடந்து பொலிவுடன் காணப்படும் உதகை அரசு தாவரவியல் பூங்கா, பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்ட அரசு ரோஜா பூங்கா, உல்லாசமாக படகு சவாரி செய்யும் படகு இல்லம் தென்னகத்தின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா, உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க சுற்றுலா தளங்களை கொண்ட மாவட்டமாம் நீலகிரி மாவட்டம்.

இங்கு சுற்றுலா தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கொரனோ பிடியில் உலகமே சிக்கித் தவித்தது. இதனால் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி பொது முடக்கம் தளர்வுகளுடனும் அதேசமயம் கட்டுப்பாடுகளுடனும் இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979 ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்துக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொேரானோ பொது முடக்கத்தால் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் களையிழந்து காணப்படுகிறது.

இதுபற்றி பூங்கா வியாபாரிகள் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது அனைத்து சுற்றுலா தளங்களின் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக வரக்கூடும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என கூறினர்.

அதேபோல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கூறுகையில் இந்த முறை நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் கலையிழந்து காணப்பட்டாலும் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில் கொரொனோ பெரும் தொற்றால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் எதிர்வரும் ஜனவரி முதல் நீலகிரி மாவட்டத்தில் ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பி மீண்டும் நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளால் களை கட்ட வேண்டும் என கூறினார்.

கொரோனா நோய் கட்டுப்பாடுகள் தற்போது உள்ள சூழ்நிலையில் மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் தனி பாஸ் வழங்கப்பட்டு வந்தாலும் எப்போதும் போல் சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்லும் நடைமுறை வந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளை நம்பி இம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென இம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.