குமரியில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்… விடுமுறை தினத்தை முன்னிட்டு சூரிய உதயத்தை காண குவிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 10:24 am
Kumari - Updatenews360
Quick Share

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு தற்போது சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்றுவிடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை உற்சாகமாக கண்டு களித்தனர். பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் மகர விளக்கு பூஜை நெருங்குவதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், சூரிய உதயத்தை செல்போனில் படம்பிடித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அதிகளவு கூட்டம் காணப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 736

0

0