சமயபுரம் ஆட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்… குறைந்த விற்பனை : விலை போகாத ஆடுகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2023, 10:29 am

சமயபுரம் ஆட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்… குறைந்த விற்பனை : விலை போகாத ஆடுகள்!!!

தீபாவளி என்றாலே பெரும்பாலானோர் இறைச்சிகளை சமைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாட உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுங்கச்சாவடி அருகே வாரந்தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனை வார சந்தை நடைபெறும்.

இன்று சனிக்கிழமை என்பதாலும் நாளை தீபாவளி என்பதால் ஆடுகளை வாங்குவதற்காக சமயபுரம் மண்ணச்சநல்லூர், கல்லக்குடி, லால்குடி,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாங்கள் வளர்த்த வெள்ளாடுகள் செம்பறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவற்றை வாங்குவதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என வருகை தந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

வழக்கத்தை விட நாளை தீபாவளி பண்டிகை என்பதால் ஆட்டு சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்வதற்காக அதிக அளவில் வியாபாரிகள் வந்தனர்.

நாளை தீபாவளி பண்டிகை என்பதால் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் சிறுவாச்சூர், மணப்பாறை,அரியலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டு வாரசந்தை நடைபெற்றது.

அங்கு அதிகளவில் ஆடுகளை கொள்முதல் செய்ததால் இன்று நடைபெற்ற சமயபுரம் ஆட்டு வாரச் சந்தையில் விற்பனை குறைவாகவே காணப்பட்டது. இதனால் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப எடுத்துச் சென்றனர்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!