ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்… தை அமாவாசை முன்னிட்டு நடவடிக்கை : விதிமீறினால் ஆக்ஷன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 9:11 pm

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்; பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்; ராமநாதபுரம் எஸ்பி தகவல்

ராமேஸ்வரத்தில் தை அமாவாசை தினத்தை ஒட்டி போக்குவரத்தில் மாற்றத்தை போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

வருகின்ற 21 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதி இருந்து சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனத்திலும் வாடகை வானத்திலும் வந்து செல்வார்கள்.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 20ஆம் தேதி மதியம் முதல் 21ஆம் தேதி இரவு முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும் ராமேஸ்வரம் நகரத்தில் வரும் வாகனம் அனைத்தும் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமி நகர், சன்னிமலை, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, சௌந்தர்யா அம்மன் கோயில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி பார்க்கிங், ஜேஜே பார்க்கிங் மற்றும் கோயில் பார்க்கில் செல்ல வேண்டும்

பின்னர் பார்க்கிங் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து கோயில்காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும் பின்னர் பார்க்கின் பகுதி இருந்து தனுஷ்கோடி நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து தேவர் சிலை வழியாக செல்ல வேண்டும் அதேபோன்று தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, ரயில்வே பீடரோடு, வண்ணார் தெரு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினாலும், பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடைவெளி ஏற்படுத்தும் நபர் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தை அமாவாசை பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் சுமார் 1000 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், குற்ற செயல்களை தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கத்துரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!