ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிய சேஸிங்… லாரி திருடனை உயிரை பணயம் வைத்து துரத்திய காவலர்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2025, 4:31 pm

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் உள்ளே ஏறி லாரியை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

இதையும் படியுங்க: தனித்து போட்டியிட்டால் தவெகவுக்கு நல்லது : விஜய்க்கு அட்வைஸ் செய்த ஹெச் ராஜா!

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியில் பின்னால் ஓடி சென்று பிடிக்க முயன்ற போது பிடிக்க முடியாததால் அருகில் இருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை துரத்திச் சென்றனர்.

அப்போது மகேந்திரா சிட்டி சிக்னலில் லாரி நின்ற போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முருகன் லாரியில் ஏற முயற்சித்துள்ளார் .

காவலர் உள்ளே ஏற முயன்றதை கவனித்த நபர் லாரியை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்றார்.

அப்போது காவலர் ஆபத்தான முறையில் லாரியில் தொங்கிக் கொண்டு சென்ற நிலையில் மறைமலைநகர் சிக்னலருக்கு போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து லாரியை கடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • suriya 46 movie silet producer is gnanavel raja படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!
  • Leave a Reply