போக்குவரத்து காவலரின் மாஸ்க்-ஐ பிடுங்கி சட்டையை பிடித்த போதை ஓட்டுநர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 7:08 pm
Traffic Police Insulte -Updatenews360
Quick Share

புதுச்சேரி : குடிபோதையில் போக்குவரத்து காவலரை ஓட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் நேற்று மாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று தாறுமாறாக ஓட்டி வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போக்குவரத்து காவலர் சுபாஷ் , தாறுமாறாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.

ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதையடுத்து அரை கிலோமீட்டர் தூரம் அந்த வாகனத்தை காவலர் துரத்தி சென்று நிறுத்தி அந்த ஓட்டுனரிடம் வேகமாக வாகனத்தை ஒட்டியது ஏன் என்று காவலர் கேட்ட போது. ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

கேள்வி கேட்ட போக்குவரத்து காவலரை அடித்தும் சட்டையை பிடித்து இழுத்தும் ஓட்டுநர் தகராறு செய்துள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் செல்போஃனில் வீடியோ எடுத்துள்ளனர் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது,

இதுகுறித்து போக்குவரத்து காவலர் சுபாஷ் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் அந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும் இவர் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் தங்கி புளி வியாபாரம் செய்து வருவதாகவும், நேற்று புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் போது அவர் குடிபோதையில் காவலரை தாக்கியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நாகராஜ் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 355

0

0