தமிழகத்தில் தொடரும் சோகம்.. உயிரை காவு வாங்கிய பட்டாசு குடோன்.. உடல் கருகி ஒருவர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 4:27 pm

தமிழகத்தில் தொடரும் சோகம்.. உயிரை காவு வாங்கிய பட்டாசு குடோன்.. உடல் கருகி ஒருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அதே போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டுகார்த்திக் உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: போலீஸ் கஸ்டடிக்கு கிரீன் சிக்னலா? மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்.!

பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபகாலமாக பட்டாசு குடோன்களில் இப்படியான விபத்து நடந்து வருவது அதிகமாகி வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு, முன்பு கூட கெங்கவல்லி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இன்று அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • kayadu lohar talks about situation ship going viral என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?