அர்த்த ராத்திரியில் அந்தரங்க ஆசை… Grindr செயலியால் இளைஞருக்கு நடந்த வில்லங்கம்!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 11:56 am
ஆபாச செயலியால் ஒருசிலர் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், செல்போனில் மூழ்கி கிடந்தார். இசைக் கல்லூரியில் படித்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, ஆபாச செயலியை பயன்படுத்தியுள்ளார்.
புதிய நட்பை ஏற்படுத்த பெண்ணை வலை விரித்து தேடியுள்ளார். அப்போது பெண் ஒருவர் அந்த இளைஞரை வசியப்படுத்தியுள்ளார். மயிலாப்பூர் வடக்கு மாட வீதிக்கு வந்தால் இன்ப பரிசு உள்ளது என்றும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் வருமாறு கூறியுள்ளார்.
இன்ப பரிசுக்காக காத்திருந்த அந்த இளைஞர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், கல்லூரி இளைஞரை அருகில் இருந்து கழிவறைக்கு இழுத்து சென்று கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்யுள்ளனர்.
அவரிடம் பணம் இல்லாததால், ஜி பே மூலம் ரூ.1300 அனுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல், இளைஞரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, இந்த விஷயத்தை போலீசிடம் கூறினால், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

நமக்கு இது தேவைதான் என்று, பயத்தில் தப்பிய இளைஞர், உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், உடனே போலீசார் விசாரணையும் நடத்தி இருவரையும் பிடித்துள்ளனர்.
மேலும் கல்லூரி மாணவரை ஏமாற்றி நூதன வழிப்பறி செய்தது மயிலாப்பூர் மாங்கொல்லை கார்டன் பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் அஜய் என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆபாச டேட்டிங் செயலியால் கல்லூரி மாணவர் வழிப்பறி சம்பவத்தில் சிக்கியது பலருக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது.
