கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற போது சோகம் : நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 6:41 pm
River 3 Dead - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : சோழவரம் அருகே காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை பாலத்தின் குறுக்கே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற காரனோடை பகுதியை சேர்ந்த ரஹமத் (வயது 15 )அர்ஜுன் (வயது 13 )மற்றும் திருவள்ளூர் ஈக்காட்டைச் சேர்ந்த சத்யா(வயது 14 )ஆகிய 3 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீண்ட நேர தேடலுக்குப் பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் மூன்று பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோழவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 483

0

0