பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்.. லாரி மோதி தூக்கி வீசப்பட்ட ஆசிரியை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 10:46 am

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

இந்நிலையில் உக்கடம் லாரி அசோசியல் பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது லாரிப் பேட்டைக்கு வந்த டிப்பர் லாரி ஆசிரியை அனிதா வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேர அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் உடனடியாக அங்கு இருந்து டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை காவல் துறையினர் சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!