ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு.. ஜூலை 1 முதல் அமல் : பயணிகள் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan24 June 2025, 5:10 pm
வரும் ஜூலை மாதம் முதல் ரயில் டிக்கெட் கட்டணங்களை சிறிதளவு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய தூர மற்றும் புறநகர் வழித்தடங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயராது என்றும், இரண்டாம் வகுப்பில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு கட்டண உயர்வு இருக்காது.
இதையும் படியுங்க: அமித்ஷா ஒரு முட்டாள்.. திமுக எம்பி ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை!
500 கி.மீ. வரை சாதாரண வகுப்பில் பயணிப்பவர்களுக்கும் கட்டண உயர்வு இல்லை. ஆனால், 500 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கட்டண உயர்வு அமலாகும் என கூறப்பட்டுள்ளது.

ஏசி இல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஒரு கி.மீ.க்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும். எடுத்துக்காட்டாக, 1,000 கி.மீ. பயணத்திற்கு முந்தைய கட்டணத்தை விட ரூ.10 அதிகம் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.