பயிற்சி ஆராய்ச்சி மாணவி தற்கொலை : கைப்பட எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!

10 September 2020, 1:06 pm
Research Student Suicide - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பயிற்சி ஆராய்ச்சி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ச்சி பயிற்சி மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்மலன் என்பவரின் மகள் ஜீனா (வயது 26) கல்பாக்கம் டவுன்ஷிப்பில் விடுதியில் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஜீனா அணுமின் நிலையத்தில் பயிற்சி ஆராய்ச்சி மாணவியாக மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் தங்கி இருந்த அறையில் ஜீனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். 

கல்பாக்கத்தில் ஓட்டுநராக பணியாற்றிவரும் ஜீனாவின் அக்கா கணவர் மகேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜீனா மின்விசிறியில் சடலமாகக் கிடந்தார்.

மேலும் ஜீனா தனது டைரியில் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கைபட எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறத்து கல்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜீனா அவரது டைரியில் எனது  தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதில் அணுமின் நிலைய பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏதேனும் பிரச்சனை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகப் பட்டாரா?. காதல் விவகாரத்தில் ஈடுபட்டாரா? வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் ஆராய்ச்சி மையம், தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விடுதியில் மாணவிகள் வைத்திருந்த செல்போன் தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

Views: - 7

0

0