மாமூல் வாங்கிய விருதம்பட்டு உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

14 June 2021, 8:23 pm
Quick Share

வேலூர்: தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் ஆதர்ஷ்சை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார்.

காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஆதர்ஷ். இவர் ஊரடங்கு காலத்தில் மாமூல் வாங்கி வந்ததாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி செல்வகுமார் ரகசிய விசாரணை நடத்தினார். இதையடுத்து விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ்சை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஆதர்ஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மது பாட்டில்கள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகாரின் எதிரொலியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 468

0

0