மக்கள் சேவையை பாராட்டி திருநங்கைக்கு கெளரவ டாக்டர் பட்டம் : 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது – திருநங்கை சத்யா..!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 3:28 pm
Quick Share

தஞ்சாவூரில் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநங்கைக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் திருநங்கை சத்யா வசித்து வருகிறார். சத்யாவை பெற்றோர் புறக்கணிக்க வில்லை. உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என விலக்கி வைக்காமல் அன்பு பாராட்டி அரவணைத்து கொண்டனர். இவை எல்லாம் சத்யாவை தவறான பாதைக்கு இழுத்து செல்லாமல் சமுக பணி ஆற்ற தூண்டியது.

சக திருநங்கைகளுடன் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றி தூய்மை பணி ஆற்றினார்.

பிளாஸ்டிக் இல்லாத நகரம் திட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மை படுத்தியது, கொரோனா தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகள் அருகில் நெருங்கிய உறவினர்களே செல்ல தயங்கிய நேரத்தில் திருநங்கை சத்யா அச்சம் அடையாமல் அவர்களை பரிசோதனைக்கு அழைத்து செல்வது. உணவு வழங்குவது போன்ற சேவை புரிந்துள்ளார்.

இவரின் சமுக பணியை அறிந்த பாண்டிச்சேரியில் உள்ள குளோபல் ஹுயூமன் பீஸ் யூனிவர்சிட்டி (Global Human Peace University) திருநங்கை சத்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சத்யா தனது பெயருக்கு முன்னாள் டாக்டர் என போட்டு கொள்வது பெருமையாக இருக்கிறது எனவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Views: - 699

0

0