கத்தி முனையில் இளைஞர்களிடம் வழிப்பறி செய்த திருநங்கை : 7 பேர் கொண்ட கும்பலை வைத்து அடித்து துன்புறுத்திய பகீர் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 9:47 pm

கத்தி முனையில் வழிப்பறி செய்த திருநங்கை உட்பட ஏழு பேருக்கு போலீஸ் வலை வீசி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவினாசி சாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழிப்பறி அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறான சூழலில் நேற்று இரவு பணி முடிந்து நீலாம்பூர் பகுதியில் சாலை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்போன் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

பணம் உள்ளிட்டவற்றைப் பறித்து சென்றது மட்டுமின்றி அவற்றை திருப்பி கேட்ட இளைஞர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளது அந்த கும்பல்.

காயமடைந்த இரண்டு இளைஞர்களும் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனை எடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து அருகில் உள்ள நிறுவனம் ஒன்றின் சிசிடிவி காட்சிகள் சோதிக்கப்பட்டன.

அதில் திருநங்கை ஒருவர் ஒரு குழுவினருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்த பிறகு 7 பேர் கொண்ட கும்பல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞர்களை மடக்கி தாக்குதல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!