உடலுறவுக்கு அழைத்த திருநங்கை… நள்ளிரவில் இளைஞருக்கு நேர்ந்த கதி : தலைநகரத்தில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2025, 9:37 am
சென்னை கொடுங்கையீரில் பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கையை நம்பி இளைஞருக்கு நேர்ந்த கதி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் ஜான் பாஷா என்பவர் வீட்டை விட்டு வெளியேறி புது வண்ணாரப்பேட்டை நடைபாதையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இதையும் படியுங்க: எதுக்கு இந்த அவசரம்? நிர்மலா சீதாராமனுக்கு பரபரப்பு கடிதம் எழுதிய தமிழக எம்பி..!!
இவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தகவல் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதி சிசிடிவியை ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியில் அடிக்கடி திருநங்கை வந்து செல்வது வழக்கம். இதனால் திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போலீசார், குகன் என்ற மலைக்கா என்ற திருநங்கையிடம் விசாரணை செய்தனர்.

அப்போது சம்பவத்தன்று ஜான் பாஷா மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் அவரது சட்டையில் அதிகமாக பணம் இருந்தது. இதை கவனித்த திருநங்கை, ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் ஜான் பாஷா மறுத்தது மட்டுமல்லாமல், திருநங்கையுடன் கடும் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் திருநங்கை ஜான் பாஷாவை பலமாக தாக்கியுள்ளார். கழுத்து பகுதியில் தாக்கியதால் ஜான் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். இதையடுத்து திருநங்கை மலைக்காவை போலீசார் கைது செய்தனர்.