‘ஜல்லிக்கட்டுல எங்க காளைகளுக்கும் அனுமதி கொடுங்க’.. ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த திருநங்கைகள்!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 5:09 pm

மதுரை ஜல்லிக்கட்டில் போட்டிகளில் தங்களின் வளர்ப்பு காளைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரி திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் முழுவதில் உள்ள திருநங்கைகள் 15க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு மதுரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் பொழுது இணையத்தில் முன்பதிவு செய்தும், திருநங்கைகளின் ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடைசி நேரத்தில் போராடி 4 காளைகள் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இதனால், இந்த ஆண்டு மதுரையில் பொங்கலை முன்னிட்டு நடைபெற உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 3 காளைகள் வீதம் அனுமதி வழங்கக் கோரி இன்று 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?