புதுச்சேரியில் 2வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: பொதுமக்கள் அவதி..!!

21 January 2021, 12:46 pm
pondy bus protest - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுவையில் போக்குவரத்து ஊழியர்களின் 2வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு திரண்ட ஊழியர்கள் பேருந்துகளை இயக்கவிடாமல் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக புதுவையில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. காரைக்காலில் பணிமனை முன்பு பேராட்டம் நடத்த வந்த ஊழியர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால், புதுச்சேரியில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் ஊழியர்கள் பணிமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர ஊழியர்கள் பேருந்துகளை இயக்க தயாராக இருந்தும் பஸ்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. நேற்று பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. 2வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் புதுவை அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Views: - 0

0

0