அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்.. பள்ளி மாணவன் கீழே விழுந்து விபத்து : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தின் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 11:49 am
Student fell from Bus - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பள்ளி மாணவர் ஒருவர் கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலை நேரம் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். ஒரு சில பகுதிகளில் குறைந்த பேருந்துகளே இயக்கப்படுவதால் வேலை செல்பவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என பேருந்து கூட்டமாக செல்வதை காணமுடிகிறது.

ஒரு சில பகுதிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்துள்ளனர்.

அப்போது படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்வாய்ப்பாக அந்த மாணவனுக்கு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்வதாகவும், பேருந்துகள் குறைந்த அளவே உள்ளதால் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுவதாக நெட்டிசன்கள் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 231

1

0