2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைபெறும் TRB தேர்வுகள் : முக்கிய தகவலை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்!!

Author: Udayachandran
31 July 2021, 12:50 pm
TRB Exam - Updatenews360
Quick Share

செப்டம்பர் முதல் நவம்பர் வரை TRB தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

மேலும்,TET,TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனையடுத்து,கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,TET,பாலிடெக்னிக் விரிவுரையாளர்,உதவி பேராசிரியர் போன்ற தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.

Views: - 174

1

0