ஒரே நாளில் ட்ரெண்டான தோனி, விஜய்.. இருவருக்கும் பொருந்தும் ஒரே ஒரு விஷயம் : ட்விட்டரை அதகளப்படுத்திய ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 2:07 pm
Dhoni Vijay-Updatenews360
Quick Share

சமீப காலமாக உலகில் எந்தபக்கமும் ஒரு சின்ன விஷயம் நடந்தால் உடனே அது வெளியே தெரிந்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள்தான்.

வாழ்க்கையில் பிரபலங்களுக்கும், பிரபலமாக துடிப்பவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக சமூக வலைதளங்கள் மாறி வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் இருவேறு பிரபலங்களின் போட்டோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்று கூல் கேப்டன் தோனி, மற்றொன்று தளபதி விஜய்.

Thalapathy Vijay to start his political party now?

எதற்காக இருவரின் புகைப்படம் ட்ரெண்டானது என்றால், சாதாரணமாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அமைதியானவர், தனது திறமையால் இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்றுத்தந்தவர், சமயோஜன புத்தியை பயன்படுத்தி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

எத்தனை கோப்பைகளை வென்று கொடுத்தாலும், இறுதியில் போட்டோவில் நிற்கும் போது ஏதாவது ஒரு ஓரமாய் நின்று புகைப்படம் எடுப்பார். இந்த விஷயத்தையும் இன்று விஜய் தனது ரசிகர்களை சந்தித்த விஷயத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் ஒன்று சேர்த்தி புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று விஜய் ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தனர். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கம் என்று தனது ரசிகர் மன்றத்தை மாற்றினார். அப்போதில் இருந்தே விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு சில தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவு மட்டும் அளித்தார். அதன்பின் வெளிப்படையாக எந்த கட்சிக்கும் ஆதரவும், அளிக்கவில்லை அதே சமயம் கட்சியும் தொடங்கவில்லை.

இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, அதிகாரப்பூர்வமாக இல்லாமல் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட 169 பேரில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Image

ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லாமல், சுயேட்சையாக நின்று விஜய் ரசிகர்கள் வென்றுள்ளனர். அதிலும் 129 பேர் வெற்றி பெற்றது பெரும் பேச்சு பொருளாக தமிழகத்தில் மாறியது. இந்தநிலையில் இன்று தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அழைத்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Image

மேலும் அந்த புகைப்படத்தில் தோனியை போலவே ஒரு மூளையில் ஓரமாக அமர்ந்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் தோனி மற்றும் விஜய் போட்டோவை வைத்து சமூக வலைதளங்களை அலங்கரித்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோஸ் படு ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 227

0

0