கோவாவில் பிரபல நடிகைக்கு பாராட்டு விழா.? கலகலப்பான கொண்டாட்டத்திற்கு தயாராகும் நடிகர், நடிகைகள்..!

Author: Rajesh
21 May 2022, 2:14 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

தற்போது, ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், ‘மௌனம் பேசியதே’வை கணக்கில் வைத்தால் சினிமாவில் 20 ஆண்டுகள் கொண்டாடுகிறார் த்ரிஷா. இதற்காக அவரின் நண்பர்களும்இ சக நடிகர்களும் இணைந்து பாராட்டு விழா ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு ரம்யா கிருஷ்ணன்இ நயன்தாரா முதற்கொண்டு பலரும் ஒத்துழைப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80-களின் கதாநாயக – நாயகிகளின் மீட்டிங் மாதிரி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். இதை சென்னையில் வைத்துக்கொள்வதா அல்லது கோவா பக்கமாக நகர்த்திவிடலாமா எனத் தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டு இருக்கிறார்கள். த்ரிஷாவின் சக தோழிகள் தவிர நடிகைகளும் சில முக்கியமான கதாநாயகர்களும் இதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!